undefined

’ரேஷன் அரிசி தான் பல ஹோட்டல்களில் சமைக்கிறார்கள்’.. அதிக விலைக்கு விற்பனை செய்யும் கூட்டம்!

 

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை மொத்தமாக வாங்கி ரேஷன் கடை வாசலில் வைத்து ஓட்டல்களுக்கு விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் இதை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் ஹஜ் கமிட்டி எதிரே உள்ள புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், வால்டாக்ஸ் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள 3 ரேஷன் கடைகளுக்கு வந்த பெண்கள் அங்கிருந்து மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்கி அங்குள்ள ஓட்டல் உரிமையாளர்களுக்கு விற்பனை செய்தனர். இந்த வீடியோவின் அடிப்படையில் பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதில் ஒரு பெண் கூறுகையில், "ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி ஓட்டல்களுக்கு விற்கிறோம். ஒரு கிலோ அரிசியை ஐந்து ரூபாய்க்கு வாங்கி எட்டு ரூபாய்க்கு விற்கிறோம். சென்னையில் பெரும்பாலான ஓட்டல்களில் பயன்படுத்தப்படும் அரிசி இது தான்.. இதில் என்ன தவறு இருக்கிறது?? என கேட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!