undefined

“ராத்திரியில் பறக்குது ஜெட்டாட்டம்..” யுவனின் குரலில் தெறிக்குது கார் ரேஸ் தீம் பாடல்!

 

சென்னையில் இன்று துவங்கி நடைபெற உள்ள ஃபார்முலா கார் ரேஸ்-4 பந்தயத்திற்கு யுவன் இசையமைத்து பாடியிருக்கும் ‘ராத்திரியில் பறக்குது ஜெட்டாட்டம்’ தீம் மியூசிக் பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

<a href=https://youtube.com/embed/dIjS3qoFvL8?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/dIjS3qoFvL8/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

 

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ்-4 பந்தயம் இன்று ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 1 ம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தனியார் அமைப்புடன் இணைந்து இந்தியாவில் இந்த கார் ரேஸ் பந்தயத்தை நடத்துகிறது.

இன்று முதல் ஒன்றாம் தேதி வரை மதியம் 12 பணி முதல் இரவு 10 மணி வரை இந்தப் போட்டி நடைபெறுவதால் சென்னை, தீவுத்திடலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களை போக்குவரத்து காவல்துறையினர் செய்துள்ளனர்.

தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் ரேஸ் நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. சுமார் 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் கார் பந்தயம் நடக்கிறது. இந்த சர்க்யூட் தீவுத் திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஃபார்முலா கார் ரேஸ்-4 பந்தயத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தீம் பாடல் ஒன்றை இசையமைத்து பாடியிருக்கிறார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை