undefined

சீன ராணுவ அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடல்!

 

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக லாவோஸ் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார். இதற்காக ராஜ்நாத் சிங் இன்று லாவோஸ் தலைநகர் வியன்டியானை சென்றடைந்தார். அதேபோன்று சீன பாதுகாப்பு அமைச்சர் டாங் ஜுன் ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வியன்டியான் சென்றுள்ளார்.

இதையடுத்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு அமைச்சரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கிழக்கு லடாக்கில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடர்பான ஒப்பந்தம் மற்றும் டெப்ராங் மற்றும் டெம்ராக் பகுதிகளில் இருந்து இந்திய, சீனப் படைகள் சமீபத்தில் வாபஸ் பெறப்பட்ட சூழலில் இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!