ரஜினியைத் தொடர்ந்து நடிகர் கோவிந்தா மருத்துவமனையில் அனுமதி... துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம்!
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த அதிர்ச்சியாக பிரபல இந்தி திரைப்பட நடிகர் கோவிந்தா மும்பையில் உள்ள கிரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை 4.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாகவும், தனது துப்பாக்கியை நடிகர் கோவிந்தா சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாக துப்பாக்கி வெடித்து அவர் காலில் குண்டு பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் கோவிந்தா விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.