undefined

  ஃபார்முலா  4 பந்தயம் நடக்கும் சாலையில் தேங்கிய மழைநீர்  !

 
 

தமிழகத்தில்  விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT)  இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெற்று வருகிறது.

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை பார்க்க வருபவர்களுக்கு சென்னைப் பல்கலை வளாகம், பத்திரிக்கையாளர் மன்ற சாலை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மைதானம்,கலைவாணர் அரங்கம், சிந்தாதிரிப்பேட்டை மாநகராட்சி மைதானம், கேந்திரிய வித்யாலயா பள்ளி மைதானம், ராஜரத்தினம் மைதானம் உட்பட  7 இடங்களில்  தற்காலிக வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.  


இந்நிலையில் சென்னையில் நேற்று முதல் மழை பெய்து வரும்  நிலையில் ஃபார்முலா  4 கார் பந்தயம் நடக்கும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து  ஃபார்முலா  4 கார் பந்தயம் நடக்கும் சாலையில் மழைநீரை அகற்றும் பணிகள் துரிதமாக  நடைபெற்று வருகிறது. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை