undefined

  7 நாட்களுக்கு  இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை!  

 

தமிழகத்தில்  அடுத்து வரும்  7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில்  ”தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்கள்,  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும்  இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அதே போல் 10ம் தேதி வரை  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கடலோர மாவட்டங்களில்  ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிசம்பர் 11ம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனையொட்டிய மத்திய கிழக்கு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு  55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் எனவும்  மீனவர்கள் மீன்பிடிக்க  செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!