undefined

காதலரை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் ... வைரலாகும் திருமண அழைப்பிதழ்...!

 

 
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது  காதலர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள  நிலையில், இவர்களின்   திருமண பத்திரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  ரகுல் ப்ரீத் சிங்   தன்னுடைய 19 வயதில், நடிகையாக அறிமுகமானவர்.   தமிழைக் காட்டிலும்  தெலுங்கு திரையுலகில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  அடுத்தடுத்து பல முன்னணி தெலுங்கு ஹீரோக்களுடன் நடித்த  ரகுல் ப்ரீத் சிங், ராசி இல்லாத நடிகை என ஒதுக்கப்பட்டார்.  


தமிழில்,  'தடையறத் தாக்க', 'என்னமோ ஏதோ' போன்ற  படங்களில் நடித்தார். இதன் பிறகு  இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இவரது நடிப்பு பெருவாரியான ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.  இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் கார்த்திக்கு ஜோடியாக தேவ், சூர்யாவுக்கு ஜோடியாக NGK போன்ற படங்களில் நடித்தார்.   இதன் பிறகு அயலான், இந்தியன் 2 படங்களில் நடித்துள்ளார்.  

இவர் கடந்த   2 ஆண்டுகளுக்கு மேலாக, பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை  காதலித்து  டேட்டிங் செய்து வருகிறார்.  இந்த ஆண்டில் திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில்   இந்த தகவலை உறுதி செய்யும் வகையில்   கல்யாண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் பிப்ரவரி 21ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.  

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க