undefined

ராகிங் கொடுமை... கல்லூரி மாணவர் சுருண்டு விழுந்து மரணம்!

 
 ராகிங் கொடுமைக்கு உள்ளாகி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மருத்துவ கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் அனில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இ ஆர்எஸ் மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அனில் மெத்தானியா, சீனியர் மாணவர்களின் ராகிங் கொடுமையால் உயிரிழந்துள்ளார். 

தர்பூர் படானில் உள்ள ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விடுதியில் தங்கியிருந்தபடியே முதலாமாண்டு படித்து வந்தார் அனில் மெத்தானியா. இந்நிலையில் நேற்று முன் தினம் கல்லூரியின் விடுதியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் முதலாமாண்டு மாணவர்களுடன் அறிமுகம் செய்துக் கொள்ளும்(?!) நோக்கில் மாணவர் அனில் மெத்தானியாவை மூன்று மணிநேரம் நிற்க வைத்து ராகிங் செய்து கொடுமைப்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. 

மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்த 18 வயதான அனில், மயங்கி சுருண்டு கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரை அருகில் இருந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சீனியர் மாணவர்கள் தன்னை தொடர்ந்து மூன்று மணி நேரம் நிற்க வைத்து ராகிங் செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். 

இந்நிலையில் உடல்நிலை மேலும் மோசமடைந்த அனில் சிகிச்சை பலனின்றி அனில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பேசிய அனிலின் உறவினர் தர்மேந்திரா, “அனிலின் குடும்பம் குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ளது. படானில் உள்ள கல்லூரியில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அவர்களது குடும்பத்தினர் இருக்கின்றனர்.

நேற்று எங்களுக்கு கல்லூரியில் இருந்து, அனில் சுருண்டு விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று எங்களை தொலைப்பேசியில் அழைத்து சொன்னார்கள். நாங்கள் இங்கு வந்தபோது ​​​​மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவரை ராகிங் செய்ததால் இறந்தது தெரிய வந்துள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும்" என்றார்.

இது குறித்து மருத்துவக் கல்லூரியின் டீன் ஹர்திக் ஷா கூறுகையில், “இது குறித்து நாங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம். காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம்" என்றார். இது குறித்து மூத்த போலீஸ் அதிகாரி கே.கே.பாண்டியா கூறுகையில், “மாணவரின்  தந்தை அளித்த புகாரின் பேரில், விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, சம்பவம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவ அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். ராகிங் குறித்தும் கல்லூரியில் இருந்து விரிவான தகவல்களை கேட்டுள்ளோம். முதற்கட்டமாக எஃப்ஐஆரில் 15 சீனியர் மாணவர்களின் பெயர்கள் சேர்த்துள்ளோம்” என்றார்

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!