1025 வங்கிப் பணியிடங்கள்... உடனடி வேலை வாய்ப்பு.. !
Officer, Manager, Senior Manager ஆகிய பணிகளுக்கென பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB Bank) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 1025 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் 07.02.2024 அதாவது இன்று முதல் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். பஞ்சாப் தேசிய வங்கியில் (PNB Bank) காலியாக உள்ள 1025 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.
Officer – 1000 பணியிடங்கள், Manager – 20 பணியிடங்கள், Senior Manager – 05 பணியிடங்கள்.
கல்வி தகுதி : CA, CMA, CFA, MBA, Post Graduate Diploma, BE, B.Tech, MCA, M.Tech ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது AICTE / UGC அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் படித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
வயது வரம்பு : Officer – 21 வயது முதல் 28 வயது வரை , Manager – 25 வயது முதல் 35 வயது வரை, Senior Manager – 27 வயது முதல் 38 வயது வரை.
சம்பளம் : இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூபாய் 36,000/- முதல் ரூபாய் .78,230/- வரை
தேர்வு முறை : வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் : SC / ST / PWBD ரூபாய் .59/-, மற்ற நபர்கள் ரூபாய் 1180/-
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் 07.02.2024 அன்று முதல் 25.02.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி : https://www.pnbindia.in/Recruitments.aspx
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க