சபரிமலை பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுங்க... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 

தமிழகத்தின் அண்டை மாநிலமாம் கேரளா கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிகோட்டில்   இதுவரை நிபா வைரஸால் 6 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  அறிகுறிகளுடன் நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதன் காரணமாக கோழிக்கோட்டில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொது நிகழ்ச்சிகள் நடத்தவும்  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.நிஃபா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு கேரள உயர்நீதிமன்றம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்  சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு நடைதிறக்கும் போது அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என  கேரள அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர், சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை நிபா வைரஸால் 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கோழிக்கோட்டில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், பொது நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா காய்ச்சல் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு, சபரிமலைக்கு மாதாந்திர பூஜைக்கு நடைதிறக்கும் போது, தேவைப்பட்டால், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுமாறு கேரள அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அத்துடன்  திருவிதாங்கூர் தேவசம் போர்டு கமிஷனர், சுகாதாரத்துறை செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை