என்ஜினீயரிங் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; செங்கல்பட்டு மாணவி முதலிடம்!

 
 

தமிழ்நாட்டில் தற்போது 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளதோடு, சில கல்லூரிகள் தன்னாட்சி பெற்றும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கு ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. 2024-25ம் ஆண்டுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்காக 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர்.

அவர்களில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, உரிய சான்றிதழ்களையும் ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருந்தனர். இவர்களுக்கு கடந்த ஜூன் 12ம் தேதி ரேண்டம் எண் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 13ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாணவர்களின் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக சரிபார்க்கப்பட்டன. இதையடுத்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்திருந்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று காலை 10:30 மணியளவில் வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்ப கல்வி ஆணையரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதன்படி பொதுப் பட்டியலில் செங்கல்பட்டை சேர்ந்த தோஷிதா லட்சுமி முதலிடமும், நெல்லையைச் சேர்ந்த நிரஞ்சனா 2ம் இடமும், நாமக்கல்லை சேர்ந்த கோகுல் 3ம் இடமும் பிடித்து அசத்தியுள்ளனர். அரியலூரைச் சேர்ந்த அஷ்விதா 4வது இடமும், சபிக் ரகுமான் 5வது இடமும் பிடித்துள்ளனர். இதே போல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேலம் மாணவி ரவணி முதலிடம் பிடித்துள்ளார். கோவை மாணவி கிருஷ்ணா 2ம் இடமும், வேலூரை சேர்ந்த மாணவர் சரவணன் 3வது இடமும் பிடித்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த மதுஸ்ரீ 4வது இடத்தையும், திருப்பூரைச் சேர்ந்த சுஜித் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!