மசாஜ் சென்டரில் விபச்சாரம்... இளம்பெண்கள் மீட்பு!
குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். மசாஜ் சென்டர்கள் இயங்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. இங்கு பணியாற்றுபவர்கள் முறைப்படி மசாஜ் செய்வதற்கான பயிற்சி முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் உள்ளவர்கள் தான் பணியாற்ற வேண்டும்.
ஆனால் ஒரு சில மசாஜ் சென்டர்களில் முறைப்படி பயிற்சி முடித்தவர்களை வைத்து மசாஜ் செய்யாமல் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக பல்வேறு புகார் போலீசாருக்கு வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கன்னியாகுமரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமாருக்கு தகவல் வந்தது. அவரது உத்தரவின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது அங்கு 2 இளம்பெண்கள், 2 வாலிபர்களுடன் இருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அங்கிருந்த 23 மற்றும் 30 வயதுடைய 2 இளம்பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 23 வயதுடைய இளம்பெண் கேரளாவை சேர்ந்தவர். 30 வயதுடையவர் புதுக்கோட்டையை சேர்ந்தவர்.
அங்கிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கேமன்ராஜ் (27), நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த சம்சீர் நவாஸ் (38) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் இந்த மசாஜ் சென்டரை தொடர்பு கொண்டு இங்கு வந்து விபசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியதாக நெய்யாற்றின் கரையை சேர்ந்த வைசாகன் (38) என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவரையும் கைது செய்தனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!