undefined

சொத்து தகராறு.. ஆத்திரத்தில் மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகள்!

 

உத்தரபிரதேச மாநிலம் சஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ரதாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்சேவக் (வயது 65). இவரது மருமகள் சாக்ஷி.
இதற்கிடையில் ராம்சேவக் மற்றும் அவரது மருமகள் ஷாக்ஷி இடையே சொத்து தகராறு அவ்வப்போது எழுந்துள்ளது. மருமகள் ஷாக்ஷி, ராம்சேவக் தனது சொத்தை மகளுக்கு கொடுப்பாரா என்று பயந்துள்ளார்.

இதனால், மருமகள் ஷாக்ஷி தனது மாமனாரை கொல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு, ராம்சேவ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர் சாக்ஷி தனது உறவினர்களான சுபவ் மிஸ்ரா மற்றும் சத்ருகன் மிஸ்ரா ஆகியோருடன் சேர்ந்து ராம்சேவை இரும்பு கம்பியால் அடித்து கொன்றனர். மறுநாள் காலை ராம்சேவ் கொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சொத்துக்காக மாமனார் ராம்சேவக்கை மருமகள் ஷாக்ஷி தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து கொலையில் தொடர்புடைய சாக்ஷி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!