undefined

ராகுல் காந்தி உருக்கம்...  நளினியை சிறையில் சந்தித்த பிரியங்கா காந்தி!  

 


 
 
 கேரளா மாநிலத்தில்  வயநாடு மக்களவை தொகுதியில்  நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் தேதிகள் நவம்பர் 20ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி என இருவரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
வயநாடு தொகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இருந்த நளினியை சந்தித்து பேசியது குறித்து  உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.


அதில் ராகுல் ” தற்போது எங்கள் முதல் பணி அரசியல் சாசன சட்டத்தை பாதுகாப்பது தான்.”  ” எனது தந்தை படுகொலையில் சிறையில் இருந்த நளினியை எனது சகோதரி பிரியங்கா நேரில் சந்தித்து கட்டியணைத்து விட்டு வந்தார். அந்த சந்திப்புக்கு பிறகு எனது சகோதரி அன்பானவளாகவும், உணர்ச்சி வசமிக்கவளாகவும் மாறிவிட்டாள். நாங்கள் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கவில்லை. அன்போடும் அரவணைப்போடும் கொண்ட அரசியலை முன்னெடுத்து வருகிறோம். அன்பான ஒரு சகோதரியை நான் கொண்டதால் நான் அதிர்ஷ்டசாலி ” எனப் பேசினார்.


இது குறித்து பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், ” 33 ஆண்டுகள் கழித்தும் இன்னும் ராஜீவ் காந்தி கொலையை வைத்து காங்கிரஸ் ஆதாயம் தேடுகிறது.  நான் கூறிய தகவல்களை கேட்டு பிரியங்கா காந்தி கோபத்திற்கு சென்றதாக நளினி பதிவிட்டுள்ளார். பிரியங்காவின் கோபம் தனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியதாகவும், பிரியங்காவின் அப்போதைய சந்திப்பு அரசியல் ஆதாயம் கொண்டது.  நளினி, மூத்த பத்திரிகையாளர் ஏகலைவன் தொகுத்த, யாழ் பதிப்பகம் வெளியிட்ட ராஜீவ் காந்தி கொலை மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.” என விமர்சனம் செய்துள்ளார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!