undefined

தந்தை ஈம சடங்கில் பங்கேற்ற சிறை கைதி எஸ்கேப்.. பாதுகாப்பு போலீசார் அதிர்ச்சி!

 

தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட  சிறைக் கைதி ஒருவர் காவல்துறையின் பாதுகாப்பில் இருந்து தப்பியோடினார். சென்னை பாடியநல்லூர் ஜோதி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (48). இவர் கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் மதுரை அருகே திருப்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் இவரது தந்தை ஆறுமுகம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காலமானதையடுத்து நேற்று சென்னை, செங்குன்றத்தில் அவரது ஈம காரியம் நடைபெற்றது. அதில் பங்கேற்க நீதிபதியிடம் 2 நாட்கள் பரோல் பெற்று மதுரை சிறையில் இருந்து காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 6 காவலர்களுடன் பாடியநல்லூரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

இதையடுத்து அங்கு நடந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்ட பரமேஸ்வரன் அங்கிருந்து திடீரென ஓடி விட்டார். பாதுகாப்பு பணிக்கு வந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து பரமேஸ்வரனை தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில், செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் புருஷோத்தமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் பரமேஸ்வரனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்