undefined

சிறைவாசம் நிறைவு.. வெளியே வந்ததும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய செந்தில் பாலாஜி!

 

471 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இன்று காலை நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனைத் தொடர்ந்து வழக்கு நடைபெற்று வரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் 25 லட்ச ரூபாய்க்கான பிணைத்தொகை மற்றும் இருவர் உத்தரவாதம் சமர்ப்பித்தனர். இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் பினையாணை புழல் மத்திய சிறைக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. காலை முதலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்பதற்காக புழல் மத்திய சிறை வளாகத்தில் திமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் குவிந்து வந்தனர்.

செந்தில் பாலாஜியை வரவேற்பதற்காக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் புழல் மத்திய சிறைக்கு வந்திருந்தனர். தொடர்ந்து புழல் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் உற்சாக வரவேற்பளித்தனர். பூக்களை தூவியும் பட்டாசுகளை வெடித்தும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனையின் பெயரில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை காலை கையெழுத்திட வேண்டி உள்ளதால் செந்தில் பாலாஜி இன்று இரவு சென்னையிலேயே தங்குவார் எனவும், நாளை காலை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட்ட பின்னர் நாளை இரவு டெல்லி சென்று திரும்பும் முதலமைச்சரையும் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 471 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!