இந்திய அரசியலமைப்பு மூலம் சமூக நீதியை அடைந்துள்ளோம்... குடியரசுத் தலைவர் உரை!
இந்திய அரசியலமைப்பின் மூலம் சமூக நீதி மற்றும் வளர்ச்சிக்கான இலக்குகளை நாம் அடைந்துள்ளோம் என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார்.
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு இன்று நடைபெற்று வருகின்றது.இந்நிகழ்வில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பங்கேற்று, அரசமைப்புச் சட்டம் ஏற்பட்டதன் 75-ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள கொண்டாட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அரசமைப்புச் சட்டத்தின் சம்ஸ்கிருதம், மைதிலி மொழி பதிப்புகள் மற்றும் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படப்பட்டது. அத்துடன், ‘அரமைப்புச் சட்ட உருவாக்கம்: ஒரு பாா்வை’, ‘அரசமைப்புச் சட்ட உருவாக்கமும் அதன் பெருமைமிகு பயணமும்’ என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து திரெளபதி முர்மு பேசியதாவது: "நமது அரசியலமைப்பு உயிருள்ள முற்போக்கான ஆவணம். நமது அரசியலமைப்பின் மூலம், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் இலக்குகளை அடைந்துள்ளோம்.
அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு இலட்சியங்களை உள்வாங்கி, அடிப்படைக் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற தேசிய இலக்கை அடைய உழைக்க வேண்டும்.பெண்கள் இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்தின் மூலம் நமது ஜனநாயகத்தில் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
இந்த சிறப்பு அமர்வில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!