undefined

உதகையில் இருந்து டெல்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர்!

 

நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு உதகையில் இருந்து டில்லி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.
நீலகிரி மாவட்ட மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உதகை வந்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. கடந்த 27ம் தேதி டில்லியில் விமானம் மூலம் கோவை வந்தவர், அங்கிருந்து கார் மூலம் நீலகிரி மாவட்டம் உதகை வந்தடைந்தார் உதகை ராஜ் பவனில் தங்கி இருந்தவர், கடந்த 28ம் தேதி குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ மையத்தில் உள்ள முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். நேற்று உதகை ராஜ் பவனில் பழங்குடியின மக்களை சந்தித்தார் பின்னர் அவர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

இந்நிலையில், இன்று காலை ராஜ்பவனில் குடியரசுத் தலைவர் மரக்கன்று நட்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் உடன் இருந்தனர். இன்று காலை உதகையில் காலநிலை மாற்றம் ஏற்பட்டு கடும் பனிமூட்டம் நிலவியதால் அவரது ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு, கார் மூலம் கோவை புறப்பட்டார்.

அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா வழி அனுப்பி வைத்தனர். அவர் கார் மூலம் புறப்பட்ட நிலையில் உதகை கோத்தகிரி சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. கோவையில் இருந்து அவர் விமான மூலம் டெல்லி சென்றடைவார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!