undefined

 கேப்டனுக்கு புகழாரம் சூட்டியவர்... டெல்லிகணேஷ் மறைவுக்கு பிரேமலதா விஜயகாந்த் இரங்கல்!

 

 தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் வயது மூப்பு காரணமாக காலமானார் இவரது மறைவிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ் திரையுலக நடிகர் திரு.டெல்லி கணேஷ் வயது மூப்பின் காரணமாக அவர் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். டெல்லி கணேஷ் கேப்டன் அவர்களுக்கு நல்ல நண்பர், கேப்டனுடன் அதிக திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். கேப்டனை பற்றிய எந்த விவாதங்களாக இருந்தாலும் ஆர்வமாக பங்கேற்று, கேப்டனுக்கான  புகழாரத்தை எப்பொழுதும் சூட்ட தவறியதில்லை.  
மிக நல்ல ஒரு நண்பரை இழந்திருக்கிறோம்.

அவருடைய இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் பேரிழப்பாகும். நாடக நடிகர்களுக்கும், திரையுலகினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன வேண்டிக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!