ஃபார்முலா 4 : இரவு 7 மணிக்கு பயிற்சி போட்டிகள்... அட்டவணை வெளியீடு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தெற்காசியாவிலேயே முதல்முறையாக இரவு நேரத்தில் சாலையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தமிழக அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தீவுத்திடல், போர் நினைவு சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை வரை 3.5 கிலோமீட்டர் போட்டிக்குரிய தூரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 19 திருப்பங்களுடன் அதிவேக நேர் வழிகளுடன் பந்தய பாதை தயாராகியுள்ளது.
சாலையின் இரு புறமும் தடுப்பு சுவருடன், கம்பி அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகளில் கார்களின் பாதுகாப்புக்காக நிறைய டயர்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இந்த போட்டியை ஏறக்குறைய 9000 ரசிகர்கள் நேரில் கண்டுகளிக்க இருப்பதாக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டிருந்தது. எப்.ஐ.ஏ. சான்று பெற இரவு 8 மணி வரை அவகாசம் அளித்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். எப்.ஐ.ஏ. சான்று பெறாவிட்டால் பந்தயத்தை ஒத்திவைக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பார்முலா 4 கார் பந்தயம் தொடர்பாக முதற்கட்ட அனுமதியை எப்.ஐ.ஏ. வழங்கி உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணிக்கு கார் பந்தய பயிற்சி போட்டிகள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பார்முலா 4 கார் பந்தயத்தின் பயிற்சி போட்டிகள் 7 மணிக்கு தொடங்கும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி இரவு 7 மணி முதல் இரவு 10.45 மணி வரை பயிற்சி போட்டிகள் நடைபெறும் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. எப்.ஐ.ஏ. சான்றிதழ் விரைந்து பெறப்பட்டு ஐகோர்ட்டில் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில் கார்களை இயக்கி வீரர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!