உங்க ஏரியாவ செக் பண்ணிக்கோங்க... நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் தடை!
தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதி வாரியாக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அறிவிப்பு முன்னாலேயே அறிவிக்கப்பட்டு விடுகிறது. இதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நாளை தமிழகத்தின் தலைநகர் சென்னையில் முக்கிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
வடசென்னை பகுதியில் துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ராளபாடி, சின்னம்பேடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தாம்பரத்தில் கிருஷ்ணா நகர், வெற்றி நகர், சுபாஷ் நகர், கிருஷ்ணா நகர் 1 முதல் 8வது தெருக்கள், ரமணி நகர், மல்லிகா நகர், குமரன் நகர், சரஸ்வதி நகர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர் தெற்கு, ஸ்ரீராம் நகர் வடக்கு பகுதி, பாலகிருஷ்ணா நகர், முடிச்சூர் பகுதி சாலை, பழைய பெருங்களத்தூர்.
ஆவடி பகுதியில் டிஎன்எச்பி ஆவடி, காமராஜ் நகர், ஆவடி மார்க்கெட், ஜேபி எஸ்டேட், வசந்தம் நகர், பருத்திப்பட்டு, கோவர்த்தன கிரி, அண்ணாமலை நகர் மற்றும் கவுரி நகர். பெருங்குடி வடக்கு: சிபிஐ காலனி, ராமப்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ராஜலட்சுமி அவென்யூ, காமராஜ் நகர், வீராசாமி சாலை, டெலிபோன் நகர் ஆகிய பகுதிகள்.
கடப்பேரி பகுதியில் மெஸ் சாலை, கண்ணன் தெரு, யாதவால் தெரு, எல்லைத் தெரு, ஜிஎஸ்டி சாலை, ரெங்கா தெரு, ஜெயா தெரு, ராஜகோபால் தெரு, சீனிவாச தெரு, தாமஸ் தெரு, வடக்கு குளக்கரை, தெற்கு குளக்கரை தெரு, ஜானகியம்மாள் தெரு, திருவிக நகர் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு மற்றும் RV கார்டன் ஆகியவை.
ஆர்.கே.நகர்: எஸ்.ஏ.கோயில், திலகர் நகர், ஆர்.கே.நகர், இளையமுதலி தெரு, வி.ஓ.சி.நகர், மின்ட், கல்மண்டபம், டி.எச்.ரோடு, காமராஜ் காலனி, பெருமாள் கோயில் தோட்டம், ஆரணி ரங்கன் தெரு, திருநாவகர்சுத்தோட்டம், கோதண்டராமர் தெரு, பசுவையன் தெரு, ஸ்டான்லி ஏரியா, ஸ்டான்லி ஏரியா. தியாகப்பன் தெரு, டோல்கேட் பகுதி கன்னிகோவில் பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும். தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!