இன்று சென்னையின் இந்த பகுதிகளில் எல்லாம் மின் தடை அறிவிப்பு... உங்க ஏரியாவை செக் பண்ணிக்கோங்க!
இன்று அக்டோபர் 30-ம் தேதி சென்னையில் இந்த பகுதிகளில் எல்லாம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. உங்க ஏரியாவில் எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் என தெரிஞ்சுக்கோங்க. அதற்கேற்ப திட்டமிட்டுக்கோங்க.
இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் மக்களுக்கு தங்கு தடை இன்றி மின்சார விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் பல்வேறு துணை மின் நிலையங்களில் அவ்வப்போது மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கமான பணியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று அக்டோபர் 30ம் தேதி புதன்கிழமை சென்னையின் ஒரு சில பகுதிகளில் முழுநேர மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
கும்மிடிப்பூண்டி மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான GPD சிப்காட் பகுதி, மதர்பாக்கம் புறவழிச்சாலை, புதுப்பேட்டை, G.R.கண்டிகை, புதிய GPD பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், S.P.பேட்டை, ஐயர் கண்டிகை, SR கண்டிகை, NR கண்டிகை, GR கண்டிகை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!