undefined

கனமழை... இன்றைய பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்தி வைப்பு!

 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி  வருகிறது. இதன் காரணமாக  தமிழகம்  புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த   கனமழை எச்சரிக்கையால் நாகை, மயிலாடுதுறை, கடலூர் ,விழுப்புரம், அரியலூர் ,திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை , திருவள்ளூர்  மாவட்டங்களில்  பள்ளி ,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. 

 


இந்நிலையில் தமிழகம் முழுவதும்  பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒத்திவைக்கப்பட்ட பட்டய தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு dte.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!