32 வயசு தான்.. பிரபல நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் காலமானார்... திரையுலகில் தொடரும் சோகம்... !
பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே . இவர் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் காலமானார். இவருக்கு வயது 32. இவர் நடிப்பில் பாலிவுட்டில் வெளியான நாஷா, லவ் இஸ் பாய்சள் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு சிசிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் பதிவில் "இன்று எங்களுக்கு ஒரு கடினமான நாள். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் எங்கள் அன்பான பூனம் பாண்டேவை இழந்துவிட்டோம். இந்த துக்க செய்தியை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.
பூனம் பாண்டே அனைவரையும் அன்புடன் நேசித்தார்.” எனப் பதிவிடப்பட்டுள்ளது. பிரபல மாடலாகவும் இருந்து வந்த பூணம் பாண்டே சமூக வலைத்தளங்களில் மற்றும் சினிமா துறையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இந்த மரண செய்தி திரையுலக நண்பர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது அவரது விளம்பர ஸ்டண்டாக இருக்கலாம் எனவும் பதிவிட்டு வருகின்றனர். பூனம் பாண்டே அவரது கிளாமரான போட்டோ ஷூட்கள், கருத்துக்களால் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தியவர். அதே நேரத்தில் பூனம் பாண்டேவின் மேலாளர் இறப்பு செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார். 2011ல் இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெற்றது.
அப்போது பூனம் பாண்டே இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்றால் முழு ஆடையையும் கழட்டி வீடியோ போடுவேன் என வீடியோ வெளியிட்டு இருந்தார். இத்தகவலால் ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானார் பூனம் பாண்டே. அதன் பிறகு மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து பல முறை சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வழக்கமாகி விட்டது. கடைசியாக பூனம் பாண்டே கடைசியாக கங்கனா ரனாவத்தின் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இவர் சாம் பாம்பேபை திருமணம் செய்து கொண்ட தகவலும் சர்ச்சைக்குள்ளானது. 2020ம் ஆண்டு திருமணமான சில வாரங்களில் தன் மீது வன்முறையில் ஈடுபட்டதாக தனது கணவர் சாம் பாம்பே மீது குற்றம் சாட்டி அவரை பிரிந்து விட்டார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க