undefined

பொங்கல் தொடர் விடுமுறை... தமிழகம் முழுவதும் 25,752 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

 
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக தமிழகத்தில் இந்த விடுமுறை நாட்களில் மொத்தம் 25,752 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2092 பஸ்களுடன், 5,736 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7, 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

இதே போல் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 15ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் 5,290 சிறப்பு பேருந்துகளும் ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,926 பேருந்துகள் என மொத்தம் 12,216 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 25,752 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, நெல்லை, சேலம், கோவை, கும்பகோணம் மற்றும் தஞ்சை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் (புறநகர்) இருந்தும், வந்தவாசி போளூர் மற்றும் திருவண்ணாமலை வழியாக செல்லும் பேருந்துகள் கிளாம்பாக்கம் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சீபுரம், வேலூர், பெங்களூரு மற்றும் திருத்தணி வழியாக செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பொன்னேரி, ஊத்துக்கோட்டை வழியாக ஆந்திரா வழியாக செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும்” என்று தெரிவித்தார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!