undefined

தவெக மாநாடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு திரும்பிய காவலர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

 

தவெக மாநாட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து திரும்பிய காவலர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியான தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில் கடந்த 27ம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 6,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்களில் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் சத்தியமூர்த்தி, தமிழக வெற்றி கழக மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். மதுராந்தகம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி மாநாடு முடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். விழுப்புரம் அய்யூர் அகரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

அவர் ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்ததாகவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக அவர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!