புகையிலை பொருட்களை விற்பனை செய்த நபரை கையும் களவுமாக பிடித்த போலீசார்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆதனூர் கிராமத்தில் உள்ள சேட்டு என்பவரின் கடையில் சில நாட்களுக்கு முன்பு ஆரணி தாலுகா போலீசார் சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சேட்டு கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியைச் சேர்ந்த சாமுவேல் என்பவர் சனிக்கிழமை தோறும் சேட்டு கடையில் கைப்பையில் மிக்ஸி, சிப்ஸ் போன்ற பொருட்களை விற்பனை செய்து வந்தார். விசாரணையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று விற்ற பொருட்களுக்கு பணம் எடுக்க வந்த சாமுவேலை ஆரணி தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!