“ப்ளீஸ்... காப்பாத்துங்க...” தாக்குதலில் சிக்கி பல மணி நேரம் கதறிய சிறுமிக்கு நேர்ந்த சோகம்!
காசாவில் பயணித்த கார் இஸ்ரேல் தாக்குதலால் தீப்பிடித்ததை அடுத்து, வாகனத்தில் சிக்கிய 5 வயது சிறுமி பல மணிநேரம் காப்பாற்றுமாறு கதறினாள்."எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது, தயவுசெய்து காப்பற்றுங்கள் என தொடர்ந்து கூச்சலிட்டுள்ளார். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.
"அந்த காரில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர்" என்று அவரது தாத்தா பஹா ஹமடா கூறினார். “ இதையடுத்து இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதால் குடும்ப உறுப்பினர்கள் அப்பகுதியை அடைய முடிந்தது,” என்று அவர் மேலும் கூறினார்.என் மகளின் கூக்குரல் கேட்டு காப்பாற்றாதவர்களிடம் சண்டை போடுவேன்’ என வேதனையுடன் கூறினார் ஹிந்தின் தாய் விஸ்ஸாம் ஹமாடா.
பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கத்தின் சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்பட்ட காட்சிகளில், பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸின் சிதைந்த பகுதிகளைக் காட்டுகிறது. அனுப்பபட்ட ஆம்புலன்ஸ் இஸ்ரேலிய ராணுவத்தால் அழிக்கப்பட்டது. மேலும், குழந்தையை மீட்கச் சென்ற யூசுப் அல்-சீனோ மற்றும் அஹ்மத் அல்-மடூன் ஆகிய இரு மருத்துவர்களும் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!