தெருவில் விளையாடிய போது அதிர்ச்சி.. மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சிறுவன்!
திருச்சியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி சிந்தாமணி அருகே உள்ள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகன் பிரித்வி அஜய் (12). இவர் திருச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று இரவு ஆண்டாள் வீதி பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மின்கம்பத்தில் கை வைத்தார். அங்கு அபாயகரமாக தொங்கிய மின் கம்பி ஒன்று அவர் மீது எதிர்பாரத விதமாக உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சிறுவன் அங்கேயே சுருண்டு விழுந்தான். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், அருகில் இருந்தவர்கள் சிறுவனை உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!