undefined

பிரபல தாதா வைத்த பார்ட்டியில் பிசாசு பட நடிகை.. போதை வஸ்துகளை எடுத்துக்கொண்ட அதிர்ச்சி!

 

கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல் போதை விருந்தும், சூதாட்ட நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாதா ஓம்பிரகாஷ் தலைமையில் நடந்த இந்த போதை விருந்தில் தமிழ் திரைப்பட நடிகையும் கலந்து கொண்டார். அது வேறு யாருமல்ல. மிஷ்கினின் பிசாசு படத்தில் நடித்தவர் பிரயாகா மார்ட்டின். அவர் போதை விருந்தில் கலந்து கொண்டு மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், உடனடியாக பார்ட்டி நடக்கும் ஓட்டலுக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் போதை மருந்து மற்றும் சூதாட்ட நிகழ்ச்சி நடந்தது தெரியவந்தது. இதுதவிர கேரள நடிகரும் பார்ட்டிக்கு சென்றார். நடிகை பிரயாகா மார்ட்டினுடன் தொடர்புடைய நடிகரும் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளார்.

இதையடுத்து தாதா ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். அதேபோல், கேரள நடிகர், நடிகையிடமும் போதை விருந்தளித்த தகவல் குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓம் பிரகாஷ் கேரளாவில் ஒரு பெரிய தாதா. கேரளாவில் நடத்திய விருந்தில் தமிழ் நடிகை என்ன செய்தார் என்பது குறித்து நடிகரும், திரைப்பட விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் விசாரணைக்கு பிறகே முழு விவரம் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!