undefined

 சென்னை முழுவதும் பிங்க் ஆட்டோ...  விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

 

 
 
சென்னை மாநகர் முழுவதும் பிங்க் நிற  இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பயணங்கள் பாதுகாப்பாக அமைய  ஒரு புதிய முன்னெடுப்பாக 'இளஞ்சிவப்பு ஆட்டோக்களை' தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.


இத்திட்டத்தின் படி  பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் சென்னை மாநகர் முழுவதும் இயக்கப்பட உள்ளன. அவசர காலங்களில் புகார் பெறப்பட்டவுடன், காவல்துறையின் மூலம் விரைவான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் வகையில்  ஒவ்வொரு பிங்க் இளஞ்சிவப்பு ஆட்டோவிலும், பெண்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 23 ம் தேதி என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், டிசம்பர் 10 ம் வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் அறிவித்துள்ளார்.


இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தேவையான தகுதிகள்:
பெண்கள் மட்டும்  
குறிப்பாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை  
 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சென்னையில் குடியிருக்க வேண்டும். என தகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!