பி.எப். வட்டி விகிதம் அறிவிப்பு.. .ஊழியர்கள் உற்சாகம்!

 

இந்தியா முழுவதும் மாத சம்பளம் பெற்று பணிபுரிபவர்களின்  வருங்கால செலவினங்களுக்காக  EPFO கணக்குகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. இந்த கணக்குகளுக்கு அதற்கான ஆண்டு வட்டியாக 8.15% வழங்கப்பட்டு வருகிறது. அதனை மத்திய அரசு 8.25 சதவீதமாக உயர்த்த இருப்பதாக  தெரிய வந்துள்ளது.

இந்த வட்டிவிகித உயர்வு தொழிலாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அதன் உறுப்பினர்களுக்கு பி.எப். ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டு பலன்களை வழங்கி வருகிறது.  தொழிலாளர்களின் வைப்பு நிதிக்கு சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-23-ம் நிதியாண்டில் வழங்கப்பட்ட வட்டி விகிதத்தை காட்டிலும்  2023-24-ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.  இந்த வட்டி அதிகரிப்பு அதன் தொகைக்கு ஏற்ப  வட்டி சந்தாதாரர்களின் கணக்கில் வரவு வைக்கப்படும். வட்டி விகிதம் உயர்வு குறித்த தகவல் 6 கோடிக்கும் அதிகமான பி.எப். சந்தாதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க