உஷார்... AI ஆல் விபரீதம்... குடும்ப உறுப்பினர் குரலில் பேசி பணமோசடி... சைபர் க்ரைம் எச்சரிக்கை!
முன்பெல்லாம் திருட்டு, வழிப்பறி இதெல்லாம் நேரடியாக வந்து அடித்து போட்டு விட்டு எல்லாவற்றையும் ஆட்டைய போடுவதாக இருந்தது. தற்போது இவை ஹைடெக்காக மாறி மக்களை பெரும் குழப்பத்திலும் நஷ்டத்திலும் ஆழ்த்தியுள்ளது. செல்போனில் பேசியபடியே பணத்தை அபேஸ் செய்யும் ஆசாமிகள் அதிகரித்து வருகின்றனர். வெளிமாநிலத்தில் ரேண்டமாக ஏதாவது ஒரு நம்பருக்கு போன் செய்வர்.தாங்கள் குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும் தங்களுடைய ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டுவிட்டதாகவும் அந்த எண்ணை கூறினால் உடனே ரிலீஸ் செய்வதாகவும் இல்லாவிட்டாலும் தங்களால் பணமே எடுக்க முடியாது என கண்ணீருடன் கூறுவர்.
இதை நம்பாமல் ஆவது ஆகட்டும் என சொல்பவர்கள் நிறைய பேர். அப்பாவிகள் சிலர் ஏடிஎம்மில் உள்ள எண்ணை கூறி பணத்தை இழந்ததும் அரங்கேறியுள்ளது. இதுகுறித்து புகார் அளித்தாலும் பணம் திரும்பி கிடைக்கப்போவதில்லை. அது போல் "நீங்கள் மின்கட்டணம் செலுத்தவில்லை. தற்போது நாங்கள் சொல்லும் எண்ணுக்கு பணம் செலுத்துங்கள். இல்லாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்" என அச்சுறுத்தல் நடக்கும். வாடிக்கையாளர்கள் "பணம் செலுத்தியாச்சு” என சொன்னாலும் "இன்னும் எங்களுக்கு வரவில்லை. அது உங்கள் கணக்கில் ஏற 2 நாட்கள் ஆகலாம். இப்போது பணத்தை செலுத்தல்லன்னா மின் இணைப்பை துண்டிச்சிடுவோம். நீங்கள் ஏற்கனவே கட்டியிருப்பது எங்கள் அக்கவுண்டுக்கு வந்ததும் நீங்கள் செலுத்திய பணத்தை திருப்பி அனுப்பி விடுகிறோம்” என்பர். இந்த கதையால் ஏமாந்தவர்கள் ஏராளம்.
இந்த மாதிரியான சம்பவங்கள் குறித்து தமிழக காவல் துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தற்போது டெக்னாலஜி வளர வளர, மோசடிகளும் ஹைடெக்காக மாறி வருகின்றன. ஏஐ மூலம் தொழில் நுட்ப வளர்ச்சி இருந்தாலும் இதனை கெட்டதற்காகவே நிறைய பேர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஏஐ குளோனிங் டெக்னாலஜியில் உறவினர்கள் பேசுவது போல் பேசி பண மோசடியில் ஈடுபடுவதாகவும் சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நம் நெருங்கிய உறவினர் பேசுவது போலவே அவர்கள் அழுதுக் கொண்டே எதற்காகவாவது பணத்தை உடனே அனுப்பு என்பார்கள். நாமும் அவசரம் ஆச்சே என நினைத்து உடனே பணத்தை அனுப்பினால் அது மோசடி செய்யப்படும். மீண்டும் நாமே கால் செய்து அந்த உறவினரிடம் விசாரித்தால்தான் உண்மை தெரியும். எதையும் நேரில் போய் பார்க்காமல் வெறும் குரலை மட்டுமே நம்பி பணத்தை செலுத்தாதீர்கள் என சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!