undefined

18 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்!!  

 
கோவில் திருவிழாவை நடத்த அனுமதி தர வலியுறுத்தி 18 கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மதுரை மாவட்டம் எழுமலையில் உள்ள பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் திருவிழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இத்திருவிழாவில் தேரோட்டம் எழுமலையில் உள்ள நான்கு முக்கிய வீதிகளில் வழியாக நடைபெறும்.

அதைப் போல் இந்த ஆண்டு முத்தாலம்மன் கோவில் திருவிழா தேரோட்டத்தை நடத்த கோவில் நிர்வாகிகள் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.இந்நிலையில் கோவில் திருவிழாவிற்கு சட்ட ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி அரசு அதிகாரிகள் கோவில் திருவிழாவை நடத்துவதற்கு அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து இக்கோவிலை வழிபடும் எழுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள 18 கிராம மக்கள் கோவில் திருவிழாவை நடத்த அனுமதி வழங்க கோரி எழுமலையில் உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.மேலும் இப்போராட்டத்தில் கிராம வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து விட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கோவில் நிர்வாகிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போரட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.