கதறும் மக்கள்... 14 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... தெற்கு சூடானை சூழ்ந்த பெருவெள்ளம்!
சூடானில் 14 லட்சம் பேர் பெருவெள்ளத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவிக்கின்றனர். இது குறித்து ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “தெற்கு சூடானில் ஏற்பட்ட வெள்ளத்தால், தெற்கு சூடான் மற்றும் சூடானின் அபிசீனிய பகுதி மற்றும் 43 நாடுகளில் இருந்து 1.4 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. இதில், ஜாங்கலாய் மற்றும் வடக்கு பஹ்ர் எல் கஜல் மாகாணங்கள் 51 சதவீதம் அளவிற்கு மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
அறிக்கையின்படி, 22 நாடுகள் மற்றும் அபை பிராந்தியத்தில் இருந்து 3.79 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால், மலேரியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. வெள்ளம் காரணமாக, வீடுகள் சேதமடைந்துள்ளன. கால்நடைகளும், பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
பருவநிலை மாற்றத்தின் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக தெற்கு சூடானில் நிலைமை மோசமடைந்துள்ளது. 2021ம் ஆண்டில் யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் 7.5 லட்சம் முதல் 10 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளது.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!