மக்கள் தேசிய கட்சி பிரமுகர் கொலை.. பாமக இளைஞரணி செயலாளர் உட்பட 5 பேர் நீதிமன்றத்தில் சரண்..!

 

மக்கள் தேசிய கட்சியின் பிரமுகர்  கொலை குற்றவாளிகளான  பாமக இளைஞரணி செயலாளர் உட்பட 5 பேர் ஆம்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரண் அடைந்தனர்.. நீதிபதி விசாரணைக்கு பின்  போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு  வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவேகானந்தன்(38) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இவர் இந்திய மக்கள் தேசிய கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்துள்ளார் .இவர் மீது  காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விவேகானந்தன் தனது நண்பரான அஜித் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வாலாஜாபேட்டையில் இருந்து காவேரிப்பாக்கம் நோக்கி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமைதாங்கி அருகே வந்து கொண்டிருந்த போது நீண்ட நேரமாக பின் தொடர்ந்து வந்த கார் இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் நிலை தடுமாறு கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதிய காரில் இருந்து கீழே இறங்கிய நான்கு மர்ம நபர்கள் காயமடைந்த நிலையில் சாலையில் கிடந்த விவேகானந்தனை சரமாரியாக வெட்டி அருகே உள்ள ஏரிக்கரை மீது தூக்கிச் சென்று முகத்தை சிதைத்தும் வலது கையை துண்டித்தும் கொடூரமாக கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

மேலும் உயிரிழந்த விவேகானந்தனுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது நண்பரான அஜித் காயங்களுடன் தற்போது காவல்துறையினரின் விசாரணையில் உள்ளார். மேலும் உயிரிழந்த விவேகானந்தனின் உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்ட நிலையில் விவேகானந்தன் கொலை செய்யப்பட்ட வழக்கு காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் விசாரணை தீவிரமாக மேற்கொண்டு வந்தனர் .

இந்த நிலையில் உயிரிழந்த விவேகானந்தனின் உறவினர்கள் மற்றும் இந்திய மக்கள் தேசிய கட்சியினர் அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து விவேகானந்தன் கொலை செய்யப்பட்ட சுமைதாங்கி அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கொலை குற்றவாளிகளை உடனடியாக காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் எனவும் காவல் துறையினரின் விசாரணை மெத்தனமாக நடைபெறுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் ஏ.டி..எஸ்,பி க்ரிஷ் யாதவ் தலைமையிலான  காவல்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.  சம்பவம் குறித்து  காவேரிப்பாக்கம் போலீசார் உயிரிழந்த விவேகானந்தரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டு கொலை குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த  நிலையில்.

விவேகானந்தன்  வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில்.ராணிப்பேட்டை எசையனூர் பகுதியை  சேர்ந்த  பாமக  இளைஞரணி செயலாளர் கோபி, காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு காலனி பகுதியை சேர்ந்த ராஜேஷ், நெமிலி பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த தாமோதரன், நெமிலி பெரிய கிராமம் பகுதியைச் சேர்ந்த சந்துரு, நெமிலி மாமன்டூர் பகுதியை சேர்ந்த சூர்யா உள்ளிட்ட 5 பேர்  திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி ரவி முன் சரணடைந்தனர். கொலை வழக்கு சம்பந்தமாக  நீதிபதி விசாரணைக்கு பின்னர்   போலீஸ் பாதுகாப்புடன் 5 பேரையும்  வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க