undefined

நெகிழ்ச்சி... கைக்குழந்தையுடன்  போக்குவரத்து நெரிசலை சரி  செய்த காவலர்! 

 

திருவாரூர் நகரின் முக்கிய நுழைவாயில் திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள விளமல் கல்பாலம் பகுதி. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், விஜயாபுரம் பகுதியில் வணிக வளாகத்துடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்காக திருவாரூர் பழைய பேருந்து நிலைய வழித்தடத்தை திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இரு தினங்களுக்கு முன்பு முற்றிலுமாக முடக்கியுள்ளது.

திருவாரூர் நகராட்சியின் இந்த நடவடிக்கையால், திருவாரூர் மையப் பகுதிக்கு வரும் கனரக வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் விளமல் கல்பாலம் அருகே உள்ள பாலத்தின் வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலை, விளமல் கல்பாலம் அருகே  முகூர்த்த நாள் மற்றும் பல்வேறு கோயில்களின் குடமுழுக்கு நாளான நேற்று சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுதவிர மன்னார்குடி சாலை வழியாக திருவாரூர் வரும் வாகனங்களால் திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விளமல் கல்பாலம் அருகே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி வழக்கமாக போக்குவரத்து காவலர்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில், நேற்று அங்கு யாரும் பணியில் இல்லை.இந்நிலையில், திருவாரூர் நகர காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வரும் மணிகண்டன், காலையில் பணியை முடித்துக் கொண்டு, தனது 1 வயது குழந்தையுடன் வீட்டில் இருந்து விளமல் பகுதியில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க வந்தார். போக்குவரத்து நெரிசலால் மக்கள் வாகனங்களில் செல்வதைக் கண்டனர்.

அப்போது காவலர் மணிகண்டன் கையில் குழந்தையை பொருட்படுத்தாமல் சுமார் அரை மணி நேரம் சாலையில் நின்று திருச்சி - நாகை தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்களை ஒன்றன்பின் ஒன்றாக போக்குவரத்து நெரிசலை சீர் செய்தார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக, காவலர் மணிகண்டன் சாலையின் இருபுறமும் வாகனங்களை மாறி மாறி ஓட்டும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், காவலர் மணிகண்டனை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி வழங்கினார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்