அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள்.. காஸா மருத்துவமனையை குறி வைத்த இஸ்ரேல்..?

 

காஸாவின் மிகப் பெரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த அவ்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள், போரிலிருந்து தப்பி அடைக்கலம் பெற்றிருந்தவர்கள் ஆகியோர் நேற்று வெளியேறினர்.

இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மெதாட் அப்பாஸ் கூறியதாவது:அல்-ஷிஃபா மருத்துவமனையிலிருந்து நோயாளிகள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை உத்தரவிட்டது.ஒரு மணி நேரத்துக்குள் அந்த மருத்துவமனையை அவர்கள் காலி செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கெடு விதிக்கப்பட்டது என்றார் அவர்.இருந்தாலும், இதை இஸ்ரேவ் ராணுவம் மறுத்துள்ளது. இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அல்-ஷிஃபா மருத்துவமனையை விட்டு வெளியேற விரும்புவர்களுக்கு பாதுகாப்பான வழித்தடத்தை மட்டுமே தங்களது படையினர் ஏற்படுத்தித் தருவதாகத் தெரிவித்துள்ளது.மருத்துவமனையிலிருந்து வெளியேற முடியாத
நோயாளிகளுக்கு, அங்கிருந்தபடி மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தாங்கள் அனுமதி அளித்துள்ளதாகவும் ராணுவம் கூறியுள்ளது.ஆக்கிரமிப்பு காஸா பகுதியில் இருந்து இஸ்ரேவ் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியேறியது.அதன் பிறகு அந்தப் பகுதியின் ஆட்சியைக் கைப்பற்றிய ஹமாஸ் ஆயுதக் குழுவினருக்ரல்
படையினருக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது.

இந்தப் பதற்றம் பல முறை பெரிய அளவிலான போராக உருவெடுத்துள்ளது.இந்தச் சூழலில், கடந்த மாதம் 7-ஆம் தேதி காஸாவிலிருந்து இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ஹமாஸ் குழுவினர், அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர். இதில் மிகப் பெரும்பான்மையானவர்கள் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆவர். இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட இஸ்ரேல் அரசு சூளுரைத்தது. அதற்காக காஸா பகுதியை ஒரு மாதத்துக்கும் மேல் முற்றுகையிட்டு மிகக் கடுமையாக குண்டு வீச்சு நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம், தரைவழியாகவும் காளமாவுக்குள் நுழைந்து தாக்குல் நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, காஸாவின் மிகப் பெரிய அல்-ஷிஃபா மருந்துவமனையை இஸ்ரேல் படையினர் 5 நாள்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதால் அந்த மருத்துவமனையின் செயல்பாடு நிறுத்தப்பட்டது.இதன் விளைவாக, 'இன்குபேட்டரில்" பாதுகாக்கப்பட்டு வந்த குறைப்பிரசவ சிசுக்களில் 3 சிசுக்கள் உள்பட சுமார் 40 நோயாளிகள் உயிரிழந்ததாக ஹமாஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.அந்த மருத்துவமனைக்குக் கீழே ஹமாஸ் அமைப்பினர் சுரங்க நிலைகளை அமைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது.

எனினும், இதற்கான ஆதாரங்கள் எதையும் அந்த நாடு வெளியிடவில்லை. இந்தக் குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பும் மருத்துவமனை நிர்வாகமும் திட்டவட்டமாக மறுத்து வருகின்றன.இந்த நிலையில், அல் ஷிஃபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் படையினர் புதன்கிழமை நுழைந்தனர். அப்போது அங்கு சுமார் 650 நோயாளிகளும், அடைக்கலம் தேடி வந்துள்ள பொதுமக்கள் 5,000 முதல் 7,000 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.அந்த மருத்துமனையில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் செயல்பட்டதற்கான ஆதாரங்களையும், மருந்துவமனைக்குக் கீழே ஹமாஸின் தலைமையகம் இருந்ததற்கான ஆதாரங்களையும் இஸ்ரேல் படையினர் கடந்த 4 நாள்களாகத் தேடி வருகின்றனர்.இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து நோயாளிகள், மருந்துவப் பணியாளர்கள் மற்றும் பிற பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதாக தற்போது அதிகாரிகள் கூறியுள்ளனர்.