undefined

 எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி வேலை செய்யாததால் ரயிலை நிறுத்திய பயணிகள்... பரபரப்பு!

 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோவை செல்லும் ‘சேரன் எக்ஸ்பிரஸ்’  வழக்கம் போல்  இரவு 10 மணிக்கு புறப்பட்டது. அப்போது குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில்  ஏசி வேலை செய்யவில்லை. இதனால் ஏசியில் முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இதனையடுத்து பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

உடனடியாக தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள்  ரயில் நிறுத்தப்பட்ட 11வது நடைமேடைக்கு  வந்து விசாரணை நடத்தினர். அப்போது பயணிகள் ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


உடனடியாக ரயில்வே அதிகாரிகள் ஏ.சி. மெக்கானிக்குகளை வரவழைத்து சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏசி போர்டில் ஏற்பட்ட பழுதை சரிசெய்தனர்.  ரயிலில் ஏற்பட்ட கோளாறுகள் சரிசெய்யப்பட்டு இரவு 10. 55 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது. ஏ.சி வேலை செய்யாததால் அபாய சங்கிலியை பிடித்து இழுந்து பயணிகள் ரயிலை நிறுத்தினர். இச்சம்பவம்  சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!