undefined

இன்று முதல்  திருச்சி காரைக்கால் பயணிகள் ரயில் சேவை பகுதியாக ரத்து!

 

 தமிழகத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக காரைக்கால்-திருச்சி- காரைக்கால், காரைக்கால் - தஞ்சாவூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்  இன்று அக்டோபர் 1ம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் அக்டோபர்  31ம் தேதி வரை திருவாரூர்-காரைக்கால் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.  

அதன்படி திருச்சி- காரைக்கால் ரயில் (எண்:06880), திருச்சி- காரைக்கால் ரெயில் (எண்:06490), காரைக்கால்-திருச்சி ரயில் (எண்:06739), காரைக்கால்-தஞ்சை ரயில் (எண்: 06457) ஆகிய ரயில்கள் இன்று முதல் அக்டோபர் 31ம் தேதி வரை திங்கட்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் காரைக்கால்- திருவாரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

ரயில்கள் ரத்து செய்யப்படும் நாட்களில் காரைக்காலில் இருந்து புறப்படவேண்டிய ரயில்கள் திருவாரூரில் இருந்தும், திருச்சி, தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை இயக்கப்பட்ட ரயில்கள் திருவாரூர் வரை மட்டும் இயக்கப்படும் என திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வினாத் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை