undefined

”எங்களுக்கு சாலை வசதி வேண்டும்”.. கோரிக்கை வைத்த கேலோ பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர்..!

 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சாலை வசதியில்லாமல் தவிக்கும் கிராம மக்களின் அவலத்தை வெளியுலகுக்கு தெரியப்படுத்த, அரசுப் பள்ளியில் விடுதி காப்பாளராகப் பணிபுரியும் சரவணன், கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். . குன்னூர் அருகே உள்ள அரவங்காடு குண்டடா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன்-அஞ்சலி தம்பதியின் மகன் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர், தும்மனட்டியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட சரவணனை, அவரது தந்தையும், அண்ணனும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முதுகில் சுமந்து கொண்டு பயிற்சிக்கு அழைத்துச் சென்றனர். சாலை வசதி இல்லாததால், முதியவர்கள், கர்ப்பிணிகள் தொட்டில் கட்டி, முதுகில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என்கிறார் சரவணன். சாலை வசதிக்காக பல தரப்பினரிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை என்கிறார்.

தில்லியில் டிசம்பர் 10 முதல் 17 வரை ஊடகங்கள் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் பாரா பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டதாக கூறிய சரவணன், 65 எடைப்பிரிவில் தமிழகம் சார்பில் பங்கேற்று வெற்றி பெற்றார். 150 கிலோ எடையைத் தூக்கி தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம். வீடு முழுவதும் பதக்கங்களை குவித்து வைத்துள்ள சரவணன், சாலை வசதி இல்லாத தனது கிராமத்திற்கு தமிழக அரசு சாலை வசதி செய்து தர வேண்டும் என கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க