undefined

இங்கிலாந்து நாடாளுமன்றம்.. பகவத் கீதையின் மீது சத்தியம் செய்து பதவியேற்ற பெண் எம்.பி!

 

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்றது. அக்கட்சி தலைவர் கியர் ஸ்டார்மர் புதிய பிரதமராக  பதவியேற்றார். இந்த தேர்தலில் வரலாறு காணாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்திய வம்சாவளி பெண் ஷிவானி ராஜா (வயது 29) லெஸ்டர் கிழக்கு தொகுதியில் கன்சர்வேடிவ் கட்சி சார்பில் வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜேஷ் அகர்வால் தோல்வியடைந்தார். அவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். லெய்செஸ்டர் கிழக்கில் 1987 முதல் தொழிலாளர் கோட்டையாக இருந்து வருகிறது. ஷிவானி ராஜா 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்த சாதனையை முறியடித்து முதல் முறையாக வெற்றி பெற்றார். தொழிலதிபரான இவர் குஜராத்தை சேர்ந்தவர்.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு விழா நடந்தது. பின்னர் ஷிவானி ராஜா பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியை ஏற்றுக்கொண்டார். இதுகுறித்து, எக்ஸ் இணையதள பக்கத்தில் அவர் அளித்த பதிலில், "நாடாளுமன்றத்தில் எம்.பி.யாக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. லெய்செஸ்டர் கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்," என்றார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!