undefined

  நெகிழ்ச்சி... உயிரிழந்தான் என நினைத்த மகன் திடீரென வந்ததும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்ட பெற்றோர்!  

 


ஆந்திர மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் வசித்து வருபவர்  சையது மைதீன். இவரது தாய் பர்வீன், தந்தை  சையது மொய்ன், சகோதரி சலேகா சுல்தானா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பை  தொடர முடியவில்லை. பள்ளி படிப்பு முடிந்த உடனேயே இவர் ஜம்மி குண்டா பகுதியில் உள்ள Pvc பைப் நிறுவனத்தில் பணி புரிந்து வந்துள்ளார். அவரது அக்காவுக்கு திருமண ஏற்பாடுகள் வீட்டில் செய்யப்பட்டன.  வீட்டை விற்று  திருமணத்தை செய்தனர்.


 
அதற்குப் பிறகும் வீட்டில் பணப் பிரச்சனை தொடர்ந்ததால்  மன அழுத்தம் காரணமாக  சையது மைதீன், வீட்டை விட்டு வெளியேறினார்.  சையது மைதீன்  ஹைதராபாத்தில் இருந்து தமிழ்நாட்டில்  கோயம்புத்தூருக்கு  ரயிலில் பயணம் செய்தார். அவருடைய அனைத்து உடைமைகளும் ரயிலில் களவு போயின.  மொழி தெரியாத ஊரில்   சையது மைதீன் மற்றவர்களிடம் தட்டு தடுமாறி பேசி எப்படியோ வாழ்க்கையை ஓட்டி வந்தார்.  சையது மைதீன் ஒன்றரை வருட காலமாக ஒரே ஒரு ஆடையை அணிந்து கொண்டு உண்ண உணவில்லாமல் உடுத்த உடை இல்லாமலும் உறங்குவதற்கு இருப்பிடம் இல்லாமல் யாசகம் பெற்று தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார். அவர் வீட்டை விட்டு வெளியேறிய தருணம்  கொரோனா காரணமாக அனைவரும் வீட்டுக்குள் முடங்க வேண்டிய சூழல் .யாரிடமாவது யாசகம் கேட்டுச் சென்றால் அங்குள்ளவர்கள் இவரை அடித்து துன்புறுத்தினர்.  

கோவையில் இருந்து ஈரோடுக்கு நடந்தே சென்றார்.  பெருந்துறையில் உள்ள சரளை பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்த சையத் மைதீன் அங்கு தனது தாய் மொழி பேசுபவர்களை சந்தித்ததும் உற்சாகம் அடைந்தார். அவர்களிடம் சென்று தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.  ஒன்றரை வருடம் கழித்து தான் உடுத்திருந்த ஆடையை மாற்றி  தனது தாயாரிடம் போனில் பேசினார்.  தன்னார்வலர்கள்  சையது மைதீனை  மீட்டு மனநல சிகிச்சை அளித்தனர். பின் அவரை குடும்பத்தினருடன்  சேர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். மகன் உயிரிழந்து விட்டான் என நினைத்திருந்த பெற்றோர் ஆந்திராவில் இருந்து வந்து கண்ணீர் மல்க மகனை கட்டிப்பிடித்து ஆரத் தழுவி உடன் அழைத்துச் சென்றனர்

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!