undefined

 திருமணத்துக்கு மறுத்த மகள்... விரக்தியில் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை!

 
 

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மகள் சம்மதிக்காமல் இருந்து வந்ததால் பெற்றோர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை பம்மல் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல், மூங்கில் ஏரி, சுவாமிநாத நகரை சேர்ந்தவர் செல்லதுரை (62). இவரது மனைவி ஈஸ்வரி (51). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு கீர்த்தனா (27) என்ற மகள் உள்ளார். அயர்லாந்தில் படித்துக் கொண்டே அங்கு கீர்த்தனா வேலைப் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்ள பெற்றோர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தனக்கு திருமணம் செய்துக் கொள்வதில் இப்போது விருப்பமில்லை என்று கூறி கீர்த்தனா தட்டிக் கழித்து வந்துள்ளார். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சென்னை வந்த கீர்த்தனாவிடம், அவரது பெற்றோர் மீண்டும் திருமண பேச்சை எடுத்து வற்புறுத்தி உள்ளனர். ஆனால் கீர்த்தனா தொடர்ந்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்ததால் பெற்றோர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டனர்.

இந்நிலையில், மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்று விரக்தியில், தந்தை செல்லத்துரையும், தாய் ஈஸ்வரியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். காலை 8:30 மணி வரை வெகு நேரமாக அவர்களது வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை தட்டி பார்த்தனர். அப்படியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, படுக்கை அறையில் செல்லத்துரையும், ஈஸ்வரியும் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்து அக்கம்பக்கத்தினர் சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், தம்பதியரின் உடல்களை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மகள் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பெற்றோர் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை