undefined

பெற்றோர்களே உஷார்... பள்ளி அருகே கஞ்சா விற்கும் வாலிபர்கள் | தமிழகத்தில் தொடரும் அதிர்ச்சி!

 

பள்ளி, கல்லூரிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புபவர்கள் கூடுமானவரை நீங்களே தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு அழைத்துச் சென்று, பின் மீண்டும் மாலையில் அழைத்து வாங்க. அது தான் தமிழகம் நமக்கு கற்றுத்தருகிற பாடமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் அருகே கஞ்சா விற்பனை அதிகரித்து வருகின்றன என்று பல மாதங்களாகவே கூறப்படுகிறது. சென்னை எஸ்.ஆர்.எம்.கல்லூரிக்கு அருகில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவைகளைக் கைப்பற்றினார்கள். திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் என்று பல மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு அருகே கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் இது குறித்து எல்லாம் இதுவரை எதுவுமே பேசாதது அதிர்ச்சியளிக்கிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டிய காலம் இது. 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புல்லாவெளியில் பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே புல்லாவெளியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் அருகே சிலர் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஆத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் புல்லாவெளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பகுதிக்கு சென்றனர்.

அப்போது அந்த பள்ளிக்கூடம் அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதை தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது 550 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதை தொடர்ந்து அந்த 2 பேரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தியதில், ஒருவர் ஆத்தூர் முத்துகிருஷ்ணன் மகன் ஆத்திராஜா (27) என்பதும், தற்போது ஸ்பிக் நகர் சாந்தி நகர பகுதியில் வசித்து வருவதும் தெரிந்தது. மற்றொருவர் புல்லாவெளி வடக்கு தெருவை சேர்ந்த பால்சாமி மகன் விஜய்(26) என்பதும் தெரிய வந்தது. இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!