undefined

அசத்தல்...  பாரா ஒலிம்பிக்... நிதேஷ் குமார் தங்கம் வென்று சாதனை!

 

 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் நிதேஷ் குமார், பிரிட்டனின் டேனியல் பெத்தேலை எதிர்கொண்டு விளையாடினார்.  

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 21-14 என்ற புள்ளிக்கணக்கில் நிதேஷ் குமாரும், 2வது செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலும் கைப்பற்றினர்.  இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட் பரபரப்பாக நடைபெற்ற நிலையில்  இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வெற்றிக்கு போட்டா போட்டி நடைபெற்றது.

 இறுதியில் 3வது செட்டில் 23-21 என்ற புள்ளிக்கணக்கில் டேனியல் பெத்தேலை வீழ்த்தி நிதேஷ் குமார் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தோல்வி கண்ட டேனியல் பெத்தேல் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.   இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை