பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. இன்றுடன் மாசி மாதம் முடிவடைந்து நாளை பங்குனி மாதம் பிறக்க உள்ளது. அந்த வகையில் தமிழ் மாதங்களில் கடைசி மாதமான பங்குனி மாதம் மங்கல மாதமாக போற்றப்படுகிறது. இந்த மாதத்தில் பல தெய்வங்களின் திருமணங்கள் நடைபெறுகின்றன. இந்த மாதத்தில் பங்குனி உத்திரத்திற்கு விரதம் இருந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு நாளை மார்ச் 14 பங்குனி மாதம் தொடங்குகிறது. மாதத்தின் தொடக்க நாளே மங்களகரமான காரடையான் நோன்பு சுமங்கலி பூஜையுடன் தொடங்குகிறது.
பங்குனி மாதத்தில் வரும் முக்கிய விசேஷங்கள், விரதநாட்கள்
பங்குனி அமாவாசை – ஏப்ரல் 8
பங்குனி பௌர்ணமி – மார்ச் 24
பங்குனி கிருத்திகை – மார்ச் 15
பங்குனி திருவோணம் – ஏப்ரல் 03
பங்குனி ஏகாதசி – மார்ச் 20 , ஏப்ரல் 11
பங்குனி சஷ்டி – மார்ச் 15 , மார்ச் 31
பங்குனி சங்கடஹர சதுர்த்தி – மார்ச் 28
பங்குனி சிவராத்திரி – ஏப்ரல் 7
பங்குனி பிரதோஷம் – மார்ச் 25 , ஏப்ரல் 6
பங்குனி சதுர்த்தி – ஏப்ரல் 12
பங்குனி 2024 : முக்கிய விசேஷ நாட்கள் :
மார்ச் 14 – காரடையான் நோன்பு
மார்ச் 24 – ஹோலிப் பண்டிகை
மார்ச் 25 – பங்குனி உத்திரம்
மார்ச் 28 – பெரிய வியாழன்
மார்ச் 29 – புனித வெள்ளி
மார்ச் 31 – ஈஸ்டர் டே
ஏப்ரல் 09 – தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல் 11 – ரம்ஜான் பண்டிகை
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!