undefined

நவம்பர் 12ம் தேதி கட்டண சேவைகள் ரத்து.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!!

 

நவம்பர் 12ம் தேதி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது  குறித்து திருப்பதி தேவஸ்தானம்  செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “ உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பல்வேறு முறைகளில் பக்தர்கள் சுவாமி  தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 12ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற இருப்பதால்   தீபாவளி தினமான நவம்பர் 12ம் தேதி காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்கவாசல் அருகே ஏழுமலையானின் தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.  இதனை முன்னிட்டு  உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சகோதரராக கோயிலில் இருக்கும் தங்கவாசல் எதிரே உள்ள கருடாழ்வார் மண்டபத்தில் எழுந்தருள்வார்.

உடன் ஏழுமலையானின் சேனாதிபதியும் அங்கு எழுந்தருள உள்ளார். தொடர்ந்து சிறப்பு பூஜைகளுடன் நடைபெறும்  ஆஸ்தானத்தை முன்னிட்டு அன்று  மாலை திருப்பதி மலையில் நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை தவிர மற்ற அனைத்து கட்டண சேவைகளும் ரத்து செய்யப்பட உள்ளன. அதேநேரத்தில் சகஸ்ரநாம தீப அலங்கார உற்சவ சேவை மாலை 5 மணிக்கு வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தீபாவளி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பக்தர்கள்  விரைந்து தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!