மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து ஒருவர் பலி!
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கணக்கம்பட்டியில் ஊராட்சிக்கு சொந்தமான பழுதடைந்த குடிநீர் தொட்டியை இடித்து அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியில் கரூர் மற்றும் மணப்பாறையை சேர்ந்த தொழிலாளர்கள் குணசேகரன், வடிவேல், சீனிவாசன் ஆகியோர் பணிபுரிந்து வந்தனர். தண்ணீர் தொட்டி மேலே இருந்து மூடியை இடித்து அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென மூடி உடைந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. பணியில் இருந்த 3 தொழிலாளர்களும் சிமெண்ட் மூடிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குணசேகரன் மற்றும் வடிவேல் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் திருச்சி மாவட்ட்டம் மணப்பாறையை சார்ந்த சீனிவாசன் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மூடிக்கு அடியில் சிக்கியிருந்த சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!