undefined

  எங்களின் தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின் தான்... அன்பில் மகேஷ்  உருக்கம்!

 


 தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  இன்று பொள்ளாச்சியில்  ஆனைமலை பகுதியில் உள்ள வி.ஆர்.டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட புதிய கலை அரங்கத்தை  திறந்து வைத்து உரையாற்றினார். இந்த விழா மேடையில் பொதுமக்கள் அமைச்சரிடம் தங்களது மனுக்களை அளித்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடையில் தன்னிடம் கொடுக்கப்பட்ட மனுக்களைஅங்கேயே உடனடியாக பிரித்து படித்து, ஒவ்வொரு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் மனுவில் கூறப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என மேடையிலேயே தெரிவித்துள்ளார்.  

மாணவர்களிடம் உரையாற்றிய  அமைச்சர் அன்பில் மகேஷ், “முதல்வர் ஸ்டாலின் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நான் முதல்வன் திட்டம், ஊக்கத்தொகை, காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.   மாணவர்கள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். நன்றாக படிக்கும் ஒவ்வொரு மாணவரும் தங்கள் வகுப்பில் பின்தங்கியுள்ள மற்ற மாணவர்களுக்கு டீச்சராக மாறி, படிப்பில் பின் தங்கிய  மாணவர்கள் முன்னேறவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தாலும், எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர்தான். அவரைப் பார்க்கப் போகும்தெல்லாம் பரீட்சைக்கு செல்லும் மாணவர்களைப் போல தயாராகி செல்வேன்” எனப் பேசியுள்ளார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!